ரஜினியின் அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்று!!அர்ஜூன் சம்பத் மகிழ்ச்சி

234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று ஏற்கனவே ரஜினி அறிவித்திருந்தார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.

Image result for ரஜினி அர்ஜுன் சம்பத்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை.

இந்நிலையில் போயஸ்கார்டன் இல்லத்தில் நேற்று  ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதன் பின்னர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில்,வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள்.

ரஜினி மன்றத்தின் கொடி. படம், பெயரை எந்த கட்சிக்கும் ஆதரவாக பயன் படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.

Image result for ரஜினி அர்ஜுன் சம்பத்

இந்நிலையில் இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில்,ரஜினியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.ரஜினியின் அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்று. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று ஏற்கனவே ரஜினி அறிவித்திருந்தார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment