முழுநேர அரசியல்வாதியாக யாரும் இருக்க முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், நான் சட்டசபைக்கு வந்தால் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன். அப்படியே வந்தாலும் வேறு சட்டையை மாட்டிக் கொண்டு வருவேன்.

முழுநேர அரசியல்வாதியாக யாரும் இருக்க முடியாது; அரசியலையே நம்பி வருவோர் நாட்டை சுரண்டுவார்கள். இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை இப்போதே முடிவு செய்ய வேண்டும். நான் தாமதமாக அரசியலுக்கு வந்ததை நினைத்து வருந்துகிறேன்.

கிராமசபை கூட்டம் எத்தனை வருடமாக உள்ளது என்பது கூட தெரியாதா?… சின்ன பையன் அரசியலுக்கு வந்தபின்பு அதனை அப்படியே காப்பி அடிப்பது சரியா? …கட்சியை தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என சொல்வது முறையல்ல.

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அது தமிழகத்தை பாதிக்கும்.திமுகவை நான் கடுமையாக விமர்சிக்க திமுகவே காரணம். மறைமுகமாக அல்ல நேரடியாகவே திமுகவை விமர்சிக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here