அமிதாப்பச்சன் கூறிய 'அந்த' விஷயத்தை மட்டும் பின்பற்ற முடியவில்லை! - ரஜினி ஓபன் டாக்!

தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்று

By manikandan | Published: Dec 17, 2019 12:01 PM

  • தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்று வருகிறது. 
  • இந்த விழாவில் அமிதாப்பச்சன் தனக்கு கூறிய அறிவுரைகள் பற்றி மனம் திறந்து பேசினார்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய ரஜினிகாந்த் , அமிதாப்பச்சன் என்னிடம் மூன்று அறிவுரைகளை கூறி பின்பற்ற சொன்னார். முதலில் தினமும் உடற்பயிற்சி செய், உன் மனதிற்கு பிடித்ததை செய் பிறர் என்ன நினைப்பார்களோ என பார்க்காதே. அரசியலில் நுழையதே என கூறினார். அவர் கூறிய இரண்டு விஷயங்களை பின்பற்றி வருகிறேன் மூன்றாது விஷயத்தை சூழ்நிலை காரணமாக பின்பற்ற முடியவில்லை. என கூறினார். நான் நிறையை கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். இன்னும் நடிக்காமல் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் என்றால் அது திருநங்கை கதாபாத்திரம் தான். எனவும், போலீஸ் கதாபாத்திரம் என்றால் நேர்மையாகவும், மிகவும் நல்லவராகவும் நடிக்க வேண்டும் ஆதலால் போலீஸ் கதாபாத்திரங்களை தவிர்த்து வந்தேன். ஆனால், முருகதாஸ் என்னிடம் கூறிய தர்பார் கதை போலீஸ் கதாபாத்திரங்களில் வித்தியாசமாக இருந்தது. அதனால் விருப்பப்பட்டு நடித்தேன் என கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc