ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் நல்லது- துரைமுருகன்

ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் நல்லது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ரஜினி-கமல் இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ஆவார்கள்.இவர்கள் கூறும்  கருத்துக்கள் அவ்வப்போது பெரும் பேசும் பொருளாக மாறும்.அந்த வகையில் தான் தற்போது ஒரு விவாதம் ஆகியுள்ளது.
முதலில் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,நானும் ,ரஜினியும் அவசியம் ஏற்பட்டால் அரசியலில் இணைவோம் என்று தெரிவித்தார்.கமல் கூறிய சிறிது நேரத்திலேயே நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு ரஜினி கூறுகையில்,மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் என்று தெரிவித்தார்.
இருவரின் கருத்து குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில்,ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் நல்லது  தான் என்று தெரிவித்துள்ளார்.