புதுச்சேரியில் நாளை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறையா …?பள்ளி கல்வித்துறை விளக்கம்

புதுச்சேரியில் நாளை அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்.

புதுச்சேரியில் சபரிமலை விவகாரம் தொடர்பாக  நாளை முழுஅடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில்  நாளை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில்  புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்  புதுச்சேரியில் நாளை அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்.பள்ளி விடுமுறை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Comment