ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா-மு.க. ஸ்டாலின்

முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு திமுக

By venu | Published: Sep 10, 2019 03:55 PM

முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அவரது வெளிநாட்டு பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,  வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் .முதலீடுகள் குறித்து 2 நாட்களில் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயார். தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளும், மாநிலத்திற்கு கிடைத்த நேரடி அந்நிய முதலீடுகளும் திமுக ஆட்சியில் பெறப்பட்டவை. திமுக ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் ரூ.46,091 கோடி அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு, 2.21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது  என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc