எனது படத்தில் வேண்டுமானால் அரசியல் இருக்கலாம்! எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளி கூட கிடையாது : நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படத்தில், மோஹன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் செப்.20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நடிகர் சூர்யா அளித்த பேட்டியில், சமூகத்தில் நடந்து கொண்டு இருக்கும் இதுவரை பதிவு செய்யாத களம் கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன் என்றும் அப்படி அமைந்தது காப்பான் படம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எல்லா மனிதனும் ஹீரோ தான். எல்லாருமே கற்றுக் கொண்டு தான் மேலே வருகின்றனர் என்றும், எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளி கூட இல்லை, எனது படத்தில் வேண்டும் என்றால் அரசியல் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.