அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையாக காண்பிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், அந்த நிலம் யாருக்கு சொந்தம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த வருகிறது.

இந்த வழக்கின் விசாரனை தற்போது தினமும் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை பாதி முடிவுற்ற நிலையில், அண்மையில் இவ்வழக்கு விசாரணையை மக்களுக்கு நேரலையாக காட்ட வேண்டும், விசாரணையில் என்ன நடக்கிறது என மக்களுக்கு தெரிவித்தில்லை என இந்துத்துவ அமைப்பை சேர்ந்த கோவிந்தாச்சார்யார் போன்றோர் மனு அளித்து இருந்தனர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி, அயோத்தி வழக்கை  நேரலையாக காண்பிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்க்கு இஸ்லாமிய தரப்பில் அதிருப்தி நிலவி வருகிறது.  காரணம், பாதி வழக்கு முடிவடைந்த நிலையில் இந்த வழக்கு நேரலையாக காண்பிக்கப்பட்டால், மக்களுக்கு அது தவறான புரிதலை ஏற்படுத்தும் என கோரப்பட்டு வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.