மோடி பிரதமர் போல்  நடந்து கொள்ளவில்லை - ராகுல் காந்தி

மோடி பிரதமர் போல்  நடந்து கொள்ளவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  குடியரசுத்தலைவர்

By venu | Published: Feb 07, 2020 08:18 PM

மோடி பிரதமர் போல்  நடந்து கொள்ளவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது  மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி பேசிக்கொண்டிருந்தார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறுக்கிட்டார். அப்பொழுது பிரதமர் மோடி பேசுகையில் , நான் 30 நிமிடங்களாக பேசி வருகிறேன். இப்போது தான் அங்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்யும் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார்  பிரதமர் மோடி. இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கூறுகையில், மோடி பிரதமர் போல்  நடந்து கொள்ளவில்லை.  மக்களவையில் நேற்று நாங்கள் பிரதமர் மோடியின் பேச்சுக்குப் பதில் அளிக்க முயற்சித்தபோது எங்களைப் பேசக்கூட அனுமதிக்கவில்லை என்று கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc