நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின் கோரிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில்  கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்தது.தமிழகத்தை பொறுத்தவரை கோவை,நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது.  பல்லாயிரக்கணக்கான  மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில்,கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும் . உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் போதாது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் கனமழை, மண்சரிவுகள் ஏற்படாமல் இருக்க வல்லுநர் குழு அமைத்து உரிய சிறப்பு திட்டம் உருவாக்க வேண்டும். நிவாரண உதவிகளை அனைத்துக்கட்சி குழு அமைத்து அக்குழுவினரின் முன்னிலையில் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.