தல அஜித்தின் பிளாக் பஸ்டர் பட இயக்குனர் படத்தில் நடித்து வரும் ஆரவ்! மேலும் பல தகவல்கள்! 

தல அஜித்தை வைத்து காதல் மன்னன் எனும் பிரமாண்ட படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சரண். அதன் பின்னர் அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா, அட்டகாசம் என ஹிட் கொடுத்தவர் அடுத்தடுத்து அசல், கடைசியாக இயக்கிய ஆயிரத்தில் இருவர் என தோல்வி படங்களை கொடுத்தார்.

தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினில் பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். காவ்யா என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.