சிறுபான்மையினர் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்! மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் பிரதமருக்கு கடிதம்!

சிறுப்பான்மையினர் அதிகமாக தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி உள்பட 49 பேர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

அந்த கடிதத்தில், ‘ சமீப காலமாக இந்தியாவில் நடக்கும் பல மோசமான சம்பவங்கள் எங்களை கவலை அடைய வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லீம்கள், தலித்துகள் மீதான கும்பல் தாக்குதல்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது. அவைகள் உடனே நிறுத்த பட வேண்டும். நாடாளுமன்றத்தில் கண்டனங்களை தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவங்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என கேட்டுள்ளார்.

ஜெய் ஸ்ரீராம் என்பது அந்த தாக்குதலின் தொடக்கமாக தற்போது மாறி வருகிறது. மதத்தின் பெயரை கொண்டு நடைபெறும் தாக்குதல்கள் அதிர்ச்சியை அளிக்கிறது. ராமர் பெயரால் நடைபெறும் இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று அந்த பெயருக்கான அவப்பெயரை தடுக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகள் கண்டிப்பாக இருக்கும். அதனால் மற்றவர்களை நாட்டிற்கு எதிரான அர்பன் நக்சல் போல சித்தரிப்பது நிறுத்தப்பட வேண்டும்.’ போன்ற பல கருத்துக்களை அதில் கூறியிருந்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.