அரசியலை விட்டு விலக நான் தயார்! தமிழிசை தயாரா? மு.க.ஸ்டாலின் சவால்!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து பேசினார் இது அரசியல் சந்திப்பு அல்ல மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஸ்டாலின் கூறிவந்தாலும், இது மூன்றாம் அணிக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவிக்கவே இந்த சந்திப்பு என அதிமுக, பாஜக காட்சிகள் கூறிவருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், ‘திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ.,வுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக’ பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்..இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த முக.ஸ்டாலின், ‘பாஜகவுடன் நான் பேச்சுவார்த்தை  உறுதிபடுத்தினால், அரசியலை விட்டு விலக தயார். ஒருவேளை நிரூபிக்க தவறினால் தமிழிசை மற்றும்  மோடி ஆகியோர் அரசியலை விட்டு விலகத்தயாரா? என சவால் விடுத்தார்.

மேலும், ‘பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்து பொய் பேட்டியை அளித்ததன் மூலம் தமிழிசை தன்னை தரம் தாழ்த்திக்கொண்டார்.’ என்றும் கூறினார்.இதனை அடுத்து, ‘மோடியை கடுமையாக விமர்சித்தது மட்டும் இன்றி அவர் மீண்டும் பிரதமராகக்கூடாது என பரப்புரை செய்தேன். ராகுல் பிரதமராக வேண்டும் என்பதில் திமுக இரட்டிப்பு உறுதியுடன் இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில், மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. அதனை விடுத்து, அதிமுக – பாஜக போல் திரைமறைவில் தரகு பேசும் கட்சி திமுக அல்ல’என தனது விளக்கத்தை அளித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment