ஐஐடி மாணவி தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் - திருமாவளவன்

மாணவி பாத்திமா தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள்

By venu | Published: Nov 14, 2019 11:11 PM

மாணவி பாத்திமா தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சென்னை ஐஐடியில் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் மீது நிகழ்த்தப்படும் சாதி, மதரீதியான ஒடுக்குமுறை, வன்கொடுமைகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc