வெடித்த ரேப் இன் இந்தியா விவகாரம் - என்னால் மன்னிப்பு கேட்க முடியாது -ராகுல் திட்டவட்டம்

ராகுல் காந்தி ரேப் இன் இந்தியா என்று கூறிய விவகாரத்திற்கு பாஜகவினர்

By venu | Published: Dec 13, 2019 02:21 PM

  • ராகுல் காந்தி ரேப் இன் இந்தியா என்று கூறிய விவகாரத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  • இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்க முடியாது என்று ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார். 
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி.இவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து தெலுங்கானா மாநில காவல்த்துறை விசாரணை மேற்கொண்டனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.இதன் பின்பு குற்றவாளிகள் நான்கு பேரை போலீசார் சுட்டு கொன்றனர்.இதன் பின்பும்  நாடு  முழவதும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகிறது. இந்த நிலையில் பாலியல் வன்முறை குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த கருத்து ஒன்றிற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தலையொட்டி பரப்புரை நடைபெற்று வருகிறது.இந்த பரப்புரையின் போது காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பேசினார்.அவர் பேசுகையில்,நாட்டின் பிரதமரான மோடி எங்கு போனாலும் மேக் இன் இந்தியா திட்டம் குறித்து பேசி வருகிறார்,ஆனால் நாட்டில் பல இடங்களில் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் அரங்கேறி ரேப் இன் இந்தியாவாக மாறி வருகிறது என்று தெரிவித்தார்.மேலும் உ. பி.யில்  பாஜக எம்.எல்.ஏ.,வால் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்பு அந்த பெண் வாகன விபத்தில் சிக்கினார். ஆனால், அதைப் பற்றி பிரதமர் ஒரு வார்த்தைகூட கூற வில்லை என்று கூறினார்.இவர் இவ்வாறு கூறியது மக்களவையில் எதிரொலித்தது.இன்று கூடிய மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.மேலும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் பின்னர் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறுகையில்,   இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.நாட்டில் தற்போது தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றது. இந்தப் பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.தினமும் செய்தித்தாளை படித்தால்  இந்தியாவில் நடக்கும் பாலியல்  குற்றங்கள் பற்றிதான் வாசிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc