மோசடி வழக்கு :சசிகலாவுக்கு எதிராக காணொலி மூலம் மறு குற்றசாட்டு பதிவு...!

மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக காணொலி மூலம் மறு

By Fahad | Published: Apr 06 2020 01:01 AM

மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக காணொலி மூலம் மறு குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டது தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு என்ற வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக  சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரிக்க அனுமதி கோரி கர்நாடக சிறைத்துறையிடம்  வருமானவரித்துறை  அனுமதி கேட்டது. இதன்பின் சசிகலாவை  வருமானவரித்துறை விசாரிக்க கர்நாடக சிறைத்துறை அனுமதி அளித்தது . அதேபோல்  சசிகலாவின் மேல் முறையீட்டின் பேரில் வழக்கில் சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.காணொலி காட்சி மூலம் சசிகலா விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி  மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக காணொலி மூலம் மறு குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டது.மேலும் 2 வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்ய, விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.