கோவில்பட்டியில் பலத்த இடி, மின்னலுடன் மழை...!!

  கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து

By Fahad | Published: Mar 30 2020 05:23 PM

  கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இன்று காலையில் பலத்த வெயில் அடித்தாலும், மதியத்திற்கு மேலாக வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து பலத்த இடி,மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.தொடர்ந்து சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததது. இந்த மழையினால் கோவில்பட்டி புதுரோடு, மார்க்கெட் சாலைகளில் மழைநீர் வெள்ளபோன்று போனதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

More News From Tamil Nadu weather