உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக திமுக தான் காரணம் – அமைச்சர் காமராஜ்

திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலங்களில் தேர்தல் தள்ளிப்போக காரணமாக இருந்தது திமுக தான்.
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் செயல்படவில்லை. தமிழகத்தில் அதிமுக இருக்கக்கூடாது என்றுதான் செயல்படுகிறார்.  முதலமைச்சர் குறித்து விமர்சித்து பேச கமல்ஹாசனுக்கு எந்தவித அடிப்படை தகுதியும் கிடையாது. அவர் அதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று  அமைச்சர் காமராஜ்  தெரிவித்துள்ளார்.