மறைமுகமாக திமுகவுடன் தினகரன் கூட்டணி வைத்துள்ளார்- தமிழிசை சவுந்தரராஜன்

திமுக என்றாலே நாடக அரசியல்தான் என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன்

By Fahad | Published: Apr 08 2020 09:42 AM

திமுக என்றாலே நாடக அரசியல்தான் என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,தமிழர்கள் பிரதமர் ஆவதை தடுத்தது திமுகதான். திமுகவின் பழைய கதையை எல்லாம் தோண்டினால் ஸ்டாலினால் திண்ணை பிரசாரத்திற்கு கூட செல்ல முடியாது. திமுக என்றாலே நாடக அரசியல்தான்.மறைமுகமாக திமுகவுடன் தினகரன் கூட்டணி வைத்துள்ளார். மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். நிச்சயமாக தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் .திமுக அமமுக கூட்டணி என்று நாங்கள் கூறியது இப்போது உண்மையாகிவிட்டது என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.