மும்பையில் பிரமாண்டமாக நடைபெற உள்ள தர்பார் ட்ரெய்லர் கொண்டாட்டம்!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். 

By manikandan | Published: Dec 16, 2019 10:13 AM

  • சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். 
  • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பட ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளது. 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நயன்தாரா, சுனில் செட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.30மணிக்கு வெளியாக உள்ளது. இந்த ட்ரெய்லரை ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களே காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற உள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  ஏ.ஆர்.முருகதாஸ், சுனில் செட்டி, அனிருத், சந்தோஷ் சிவன் என படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc