பெங்களூர் – ராஜஸ்தான்…. 12 நிமிடத்தில் கிடைத்து விடும்…பிரமித்து போன வாடிக்கையாளர் …!!

  • ஆன்லைன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரிக்கும் இந்த காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் தேவையை நிறைவேற்ற ஆன்லைன்  வணிகம் சிறந்து விளங்குகின்றது.
  • பெங்களூர்_வில் உள்ளவருக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 12 நிமிடத்தில் உணவு வந்துவிடும் என ஆன்லைன் காட்டியது வடிக்கையறை பிரமிப்படைய வைத்தது.

இந்தியாவில் உணவு வழங்கு முன்னணி டெலிவரி நிறுவனமாக இருந்து வருகின்றது “SWIGGY”. மொபைல் ஆப் மூலம் உணவுவை ஆர்டர் செய்தால் நாம் இருக்கும் இடத்திற்கே குறிப்பிட்ட நிமிடத்தில் உணவை கொண்டு வந்து சேர்ப்பதால் இத்தகைய உணவு நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகமாக இருக்கின்றது.

இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த பார்கவ் ராஜன் உணவு ஆர்டர் செய்வதற்காக swiggy-யில் அருகாமையில் உள்ள உணவகத்தை தேர்வு செய்தார்.பார்கவ் ராஜன் தேர்வு செய்தது ராஜஸ்தானில் உள்ள swiggy உணவகம்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த உணவு ஆர்டரை பிரபாகரன் என்ற வாடிக்கையாளருக்கு பிக்அப் செய்து டெலிவரி செய்ய ராஜஸ்தானில் இருந்து கிளம்பி விட்டதாகவும், 12 நிமிடத்தில் அந்த சுவையான உணவு உங்களுக்கு டெலிவரி செய்யப்படும் என்றும் ஸ்விக்கி ஆப் காட்டியது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பார்கவ் ராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். இதில் அவர் ஸ்விக்கி நிறுவனத்தையும் குறிப்பிட்டு காட்டியுள்ளார் இதையடுத்து ஸ்விக்கி நிறுவனம், ” இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது. தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி என்று பார்கவ் ராஜனுக்கு பதிலளித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment