5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது…

இங்கிலாந்து கடற்படையில் இருந்து ‘எச்.எம்.எஸ். ஹெர்ம்ஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த விமானந்தாங்கி போர்க்கப்பலை, இந்தியா கடந்த 1986-ம் ஆண்டு விலைக்கு வாங்கி ஐ.என்.எஸ். விராத் என்ற பெயரில் இந்திய கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தது. சுமார் 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய இந்த கப்பல் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டது. பின்னர் இதை அருங்காட்சியமாகவோ அல்லது உணவு விடுதியாகவோ மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகள் கைகூடாததால், … Read more

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் புதிய 6 உறைகொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு…

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் தற்போது நடைபெற்று வரும்  கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி,கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது, இதில் கீழடியில்  நடைபெற்ற அகழாய்வின் போது 6அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த  ஒரு உறையானது  முக்கால் அடி உயரமும் இரண்டு அறை  அடி அகலமும் கொண்டு உள்ளது. இதில்  மொத்தம் 6 உறைகள் கொண்ட அடுக்கு கிணறு கண்டு பிடிக்கபட்டு … Read more

மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாய் காலமானார்….

மத்திய வெளியுறவு அமைச்சர்  ஜெய்சங்கர் அவர்களின்  தாயார்  சுலோசனா சுப்ரமணியம் (90)  அவர்கள்  நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் அவர் நேற்று காலமானார். இந்த தகவலை அமைச்சர்  ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் அதில் வெளியிட்டு இருந்தார். தனது தாயின் நோய் காலத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றியும் கூறியிருந்தார். சுலோசனா மறைவுக்கு மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, பா.ஜனதா தலைவர் ராம் மாதவ், நிதி … Read more

துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி….

தமிழக துணை முதல் அமைச்சரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளருமான முன்னாள் முதல்வர் இந்நாள் துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஓ. பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை முடிந்த பிறகு இன்று மதியம் அல்லது மாலை துணை முதல்வர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.  ஏற்கனவே, கடந்த மே 25 ஆம் … Read more

பெருகும் இணைய வழி பணப்புழக்கம்… சைபர் குற்றங்கள் அதிகரிப்பு… தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து…

இந்தியாவில் தற்போது  சைபர் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் இணையம் மூலம்  நடந்த சைபர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கொரோனா பெருந்தொற்று பேரிடர் காரணமாக மக்களின்  ரொக்கப்பணம் கையாள்வது குறைந்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். எனவே டிஜிட்டல் பண வர்த்தகம் மூலம் தனிமனித தகவல்கள் திருடப்படுவதாக அப்போது அவர் தெரிவித்தார். இந்த சூழலை பயன்படுத்தி … Read more

ஒரே நாடு ஒரோ ரேஷன் கார்டு திட்டம் அடுத்த மாதம் தொடங்கிவைப்பு… அமைச்சர் காமராஜ் தகவல்…

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு  சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களிலே உள்ளதால், அதற்கான வேலைகளில் ஆளும், எதிர் மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “6 மாதத்தில் விடியல் பிறக்கும்” என்று பதிவிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “ஆறு மாதத்தில் விடியல் பிறக்கும் என ஸ்டாலின் கூறியது எல்லாம் பகல் … Read more

சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தோ-பசுபிக் நாடுகளுக்கு அமெரிக்கா உதவும்…அமெரிக்கா செனட் கமிட்டி அறிவிப்பு…

சீனவின்  அராஜக ஆதிக்கத்தை தடுக்க இந்தோ – பசிபிக் நாடுகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறோம் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பார்லிமென்டின் வெளியுறவு கொள்கைக்கான செனட் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், கிழக்கு ஆசிய மற்றம் பசிபிக் பகுதிகளுக்கான வெளியுறவு துணை அமைச்சர், டேவிட் ஸ்டில்வெல் கூறியதாவது, இந்தோ – பசிபிக்  பகுதி மிகவும் பதற்றமாகவே  உள்ளது. இதில் இந்திய பெருங்கடல், மேற்கு மற்றும் மத்திய பசிபிக் கடல் பகுதிகள், தென் சீன … Read more

ஐ.நாவின் 75ஆவது ஆண்டு கூட்டம்… இந்திய பிரதமர் சிறப்புரை…

ஐக்கிய நாடுகள்  பொதுசபையின் வருடாந்திர கூட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆண்டு ஐ.நா.வின் 75-வது ஆண்டு என்பதால் அதன் நினைவாக நாளை உயர்மட்ட கூட்டம் நடக்கிறது. அதில் ‘நாம் விரும்பும் எதிர்காலம், நமக்கு தேவையான ஐ.நா.: பன்முகத்தன்மைக்கான நமது கூட்டு உறுதிப்பாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 193 உறுப்பு நாடுகளும் ஒரு தொலைநோக்கு அரசியல் பிரகடனத்தை ஏற்றுக்கொள்கின்றன. இதைத்தொடர்ந்து 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 29-ந்தேதி வரை பொது சபை கூட்டம் … Read more

கிசான் திட்டத்தில் முறைகேடு… புகார் அளிக்க பல்வேறு இணைய முகவரிகளை அளித்த காவல்துறை…

பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்ட கிசான் திட்டத்தில் பல்வேறு முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க, தொலைபேசி, பேக்ஸ், வாட்ஸ் அப் மற்றும் இமெயில் முகவரியை தமிழக சிபிசிஐடி காவல்துறையினர்  வெளியிட்டுள்ளனர். தொலைபேசி : 044 2851 3500 பேக்ஸ் : 044 2851 2510 வாட்ஸ் அப் : 94981 81035 இமெயில் : [email protected] பிரதான்  மந்திரி கிசான் யோஜனா என்னும்  நிதி உதவி திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு, மூன்று முறை வீதம்  … Read more

பெருமைமிக்க நீல கொடி அந்தஸ்து பெறுகிறதா!?? 8 இந்திய கடற்கரைகள்!

நீல கொடி அந்தஸ்துக்கு இந்திய 8 கடற்கரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள கடற்கரைகளில் மிக தூய்மையான மற்றும் சர்வதேச அளவில் சுற்றுசூழலுக்கு உகந்தவை என்று அங்கீகரிக்கப்படுவதற்குரிய கடற்கரைகள் எவை என்று முடிவு செய்வதற்காக பிரபல சுற்றுசூழலியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய தேசிய நடுவர் குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் தேர்வு செய்யும் கடற்கரைகள் அதற்கான பரிந்துரைக்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.அவ்வாறு  அதில் தேர்வு செய்யப்படும் கடற்கரைகளுக்கு நீல கொடி அந்தஸ்து வழங்கப்படும்.  இந்த … Read more