வியாழக்கிழமை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

 

தமிழக அமைச்சரவைக் கூட்டம் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக  வியாழக்கிழமை கூட உள்ளது.

இதில் பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்க உள்ள நிதி, மானியக்கோரிக்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்து, கருத்து கேட்கப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், அரசின் சாதனைகள் தொடர்பாக ஆண்டு மலர் வெளியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போன்று வரும் 24ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் வர உள்ள நிலையில், நினைவு மண்டபத்திற்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment