மு.க.ஸ்டாலினுக்கு ஒரு பிரச்சினை வந்த முதல் ஆளாக எதிர்ப்பது நான் தான் …! தமிழக பாஜக தலைவர் தமிழிசை பகீர் தகவல்

மு.க.ஸ்டாலினின் ஸ்டாலினுக்கு ஏதாவது பிரச்சினை  ஏற்பட்டால் நான் முதல் ஆளாக எதிர்த்திருப்பேன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் சோபியா என்ற பெண்மணி எனவே சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்தார்.இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் தமிழிசை முன் முழக்கமிட்ட சோபியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் என்று உத்தரவு பிறப்பித்தது.

Image result for தமிழிசை ஸ்டாலின்

சோபியாவின் கைதை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,ஜனநாயக விரோத கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்.பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்திற்கு  தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இது உண்மையிலேயே தவறான அரசியல். சக அரசியல்வாதிக்கு அச்சுறுத்தல் கொடுக்கபட்டதை ஆதரிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதே நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டால் நான் முதல் ஆளாக எதிர்த்திருப்பேன்.அவர் எனக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது.  ஸ்டாலின் சரியான அரசியலை நடத்தவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் இதுபோல் நடந்திருக்க மாட்டார்.

DINASUVADU

Leave a Comment