மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டி..! கமல்ஹாசன் கூட்டணி அறிவிப்பு …!இந்த கட்சிகளுடன்தான் கூட்டணி …!

ஊழலற்ற என்ற வார்த்தையை தைரியமாக உபயோகிக்க இருக்கிறோம் அதனால் நிறைய பேர் கூட்டணிக்கு கிடைக்க மாட்டார்கள் என்று மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
Image result for kamal haasan party

மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.
இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார்.நடிப்பிலும் பிக் பாஸ் 2 விலும் கவனம் செலுத்தி வந்தாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் கருத்துகளை பதிவிடுகிறார்.
Image result for kamal haasan party

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன்,தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளனர் .மேலும் ஊழல் இல்லாத துறை எது? -என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.ஊழல் குறித்து பலர் பட்டியலிட்டுள்ளனர், இனி எந்தத் துறையில் ஊழல் இல்லை என்பதையே பட்டியலிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Image result for kamal haasan party
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.நாடாளுமன்ற தேர்தலில் ஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்.ஊழலற்ற என்ற வார்த்தையை தைரியமாக உபயோகிக்க இருக்கிறோம் அதனால் நிறைய பேர் கூட்டணிக்கு கிடைக்க மாட்டார்கள்.திட்டமிட்டபடி விஸ்வரூபம் – 2 திரைப்படம் வெளியாகும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment