பிஸ்கட் விரும்பி சாப்பிடுபவரா! இதை படிங்க..,

அனைவரும் அடிக்கடி உட்கொள்ள கூடிய ஒரு உணவு பொருள் பிஸ்கட் ஆகும்.அதிலும் சில தீமைகள் உள்ளது.Image result for பிஸ்கட்
குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.Image result for children eating biscuit
இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட்கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம்.
சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.
சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.Image result for பிஸ்கட்
கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட்அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.
பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச்  சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment