தலைமை நீதிபதி விவகாரம்:காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக தகவல்!

காங்கிரஸ் கட்சி ,தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டனத் தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல், கண்டனத் தீர்மான நோட்டீசை நிராகரித்த மாநிலங்களவை தலைவரின் முடிவு தவறனாது என்றும், அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது எனவும் குற்றம்சாட்டினார்.

விசாரணை நடத்திய பிறகு உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்றும், மாநிலங்களவைத் தலைவர் அப்படி செய்யாததால், அது சட்டத்திற்கு புறம்பானது எனவும் கபில் சிபல் கூறினார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அந்த வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக எந்த முடிவையும் தலைமை நீதிபதி எடுக்கக் கூடாது என விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் எனவும் கபில் சிபல் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment