அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதா வேண்டாமா என்பது அரசு ஊழியர்கள் தனி உரிமை !

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளியின் 50வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். 12 ஆண்டுகளுக்கு பின், நாட்டிற்கே முன்மாதிரியாக விளங்கும் வகையில், புதிய பாடத்திட்டங்கள் வகுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயமாக அரசுப்பள்ளியில் தான் சேர்க்கவேண்டும் என்ற ஆந்திர அரசின் உத்தரவை போன்று, தமிழக அரசு உத்தரவிடுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், அது அவர்களின் தனி உரிமை என்றார்.
கீழ்பவானி 1ஆம் எண் பாசனத்திற்காக, விரைவில் தண்ணீர் திறப்பு தேதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Leave a Comment