அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.11 , ஒரு செங்கல் கொடுக்க வேண்டும் யோகி ஆதித்யநாத் .!

  • இந்நிலையில் ஜார்கண்ட்டில் பொதுக்கூட்டத்தில் பேசிய  அம்மாநில யோகி ஆதித்யநாத்  விரைவில் ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும் .
  • மேலும் ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களும் ரூ.11 மற்றும் ஒரு செங்கல்லை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.

அயோத்தி வழக்கில்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த மாதம் 09-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் , அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் எனஉத்தரவு விட்டது.

மேலும் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும் கடந்த 12-ம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது .

இந்நிலையில் ஜார்கண்ட்டில் பொதுக்கூட்டத்தில் பேசிய  அம்மாநில யோகி ஆதித்யநாத்  விரைவில் ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும் என கூறினார். மேலும் ஜார்கண்டில் உள்ள ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களும் ரூ.11 மற்றும் ஒரு செங்கல்லை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருடைய  வளர்ச்சியும் அடங்கும் என கூறினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாஜகவும் ,  உத்திரபிரதேச அரசும் அதிக தீவிரம் மேற்கொண்டு வருகிறது என கூறினார்.

author avatar
murugan