சூப்பர்…அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் – பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு முதல் முழு அளவிலான பெண்கள் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் மகளிருக்கென இன்னும் தொடங்கப்படாத நிலையில்,மகளிர் டி20 போட்டியில் 3 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 சேலஞ்சை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில்,2023 ஆம் ஆண்டு முதல் முழு அளவிலான பெண்கள் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கங்குலி கூறுகையில்:”நாங்கள் முழு அளவிலான மகளிர்(WIPL) ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான கட்டத்தில் இருக்கிறோம்.அது நிச்சயமாக நடக்கும். அடுத்த ஆண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு ஒரு முழு அளவிலான பெண்கள் ஐபிஎல் தொடங்குவதற்கு சரியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.மற்றும் ஆண்களுக்கான ஐபிஎல் போட்டியைப் போன்று மகளிர் ஐபிஎல் மிகப்பெரிய வெற்றியை அடையும்”,என்று கூறினார்.

மேலும்,பேசிய அவர் “பெண்களுக்கான டி20 சேலஞ்ச் போட்டிகள் மீண்டும் இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும்.இதனையடுத்து, எதிர்காலத்தில்,மகளிர் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரித்தவுடன்,மகளிர் ஐபிஎல்லை நடத்த முடியும் என்று நம்புகிறோம்.ஆனால் இந்த ஆண்டு,ஐபிஎல் பிளேஆஃப்களின் போது மகளிர் டி20 சேலஞ்ச் போட்டிகள் நடைபெறும்”, என்று கூறினார்.

இதற்கிடையில்,முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்,பெண்கள் இந்தியன் பிரீமியர் லீக்கைத் தொடங்குவதை கிரிக்கெட் வாரியத்தின் முன்னுரிமையாக மாற்றுமாறு பிசிசிஐ தலைவர் கங்குலியை வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan