உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்தால் இதைக் கூட செய்ய முடியாதா ? பிசிசிஐ மீது ரசிகர்கள் அதிருப்தி.!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடிய இரண்டாவது டி-20 போட்டி, மைதானத்தின் ஈரம் காரணமாக தாமதாக தொடங்கியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நாக்பூரில், நேற்று நடந்த இரண்டாவது டி-20 போட்டி ஈரமான அவுட்பீல்டு காரணமாக தாமதமாக தொடங்கி 8 ஒவர்களாகக் குறைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை குற்றம் சாட்டியுள்ளனர்.

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியங்களில் பிசிசிஐ ஒன்றாகும் , ஆனால் மைதானத்தில் ஒழுங்கான மழைநீர் வடிகால் அமைப்பு இல்லாமல் தடுமாறிவருகிறது. ஆட்டம் நடக்கும் நாளன்று மழை பெய்யவில்லை இருந்தாலும் மைதானத்தின் ஈரப்பதம் காரணம் காட்டி ஆட்டம் தாமதாக தொடங்கியது.

இது குறித்து ரசிகர்கள் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மைதானத்தின் மேற்பார்வையாளர்கள், மைதானத்தை ஏன் நல்ல முறையில் தயார் செய்யவில்லை? என்று கேள்வியெழுப்பியுள்ளார். மற்றொருவர், நிர்வாகத்தினர் இதற்கு முழு பொறுப்பும் ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment