ஜெ.பி நட்டாவை சந்தித்தது ஏன்? – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.!

தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் நட்டாவை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இரண்டாவது முறையாக 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள தமிழகம் வந்திருக்கிறார். தனி விமானத்தில் மதுரை வந்த ஜே.பி.நட்டா நேற்று இரவு தனியார் விடுதியில் தங்கினார். இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் விடுதிக்கு திரும்பிய ஜெ.பி.நட்டா தமிழக பாஜக முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனிடையில், ஜெ.பி.நட்டாவை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசியுள்ளார். பின்னர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மரியாதை நிமித்தமாக தான் அவரை சந்தித்தேன்.கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக ஜே.பி.நட்டா இருந்ததால், நேரில் சென்று பார்த்ததாகவும் விளக்கமளித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கருடன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்