அமமுக, அதிமுகவுடன் இணையும் என்று யார் சொன்னது? – டிடிவி தினகரன்

அமமுக, அதிமுகவுடன் இணையும் என்று யார் சொன்னது? என்று கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக ஆரம்பிக்கப்பட்டதே அதிமுகவை ஜனநாயக முறையில் மீட்டெடுப்பதற்கு தான். தமிழகத்தில் மாபெரும் சாதனை படைத்து மக்கள் ஆதரவுடன் அம்மாவின் ஆட்சியை அமைப்போம். அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வருவதே எங்கள் கொள்கை, மக்கள் நிச்சியமாக அமமுகவை தேர்ந்தெடுப்பார்கள்.

தப்பித்தவறி திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாங்கல்லாம் எப்போதும் போல மடியில் கனமில்லை, ஆதலால் பொதுக்கூட்டத்துக்கு செல்வோம், ரோட்டில் கூட நிற்போம். ஆனால், அதிமுகவினர் எங்கு செல்வார்கள் என உங்களுக்கு தெரியும். நீங்களே பாருங்கள் என்று கூறியுள்ளார். ஆர்கே நகரில் எப்படி சாதனை படைத்தோமோ, அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை அமைப்போம்.

அம்மாவின் தொண்டர்கள் எங்களுடன் அணி திரள்வார்கள். மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் செய்வது, அரசின் திட்டங்கள் மக்களிடம் சேரவில்லை என்பதை காட்டுகிறது. பேரறிஞர் அண்ணா மக்களுக்கு சேவை செய்வதை நோக்கி பயணியுங்கள் என்று சொல்லியிருக்கிறார். மத்திய பட்ஜெட் கொஞ்சம் மகிழ்ச்சியையும், நிறைய கவலையையும் தரும் பட்ஜெட்டாக உள்ளது.

தேவை இருந்தால் நாங்கள் யாரை பத்தியும் விமர்சிப்போம். தேவையில்லாமல் ஒருத்தவர்களை குறித்து விமர்சிப்பது அவசியமில்லை. நாங்கள் அதற்கு வந்த அரசியல்வாதியம் கிடையாது. அமமுக, அதிமுகவுடன் இணையும் என்று யார் சொன்னது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சசிகலா விரைவில் செய்தியாளர்களை சந்திப்பார். அப்போது, உங்களுக்கு, டிடிவி தினகரனுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து கேளுங்கள் என்று செய்தியாளர் கேள்விக்கு பதில் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்