எதிர்க்கட்சி தலைவர் யார்? – தொடங்கியது அதிமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டம்!!

எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ.பன்னீர்செல்வமா என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனை தற்போது தொடங்கியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இன்று மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனை முடிந்த பின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற முடிவு எதுவும் எட்டாத நிலையில் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்