தளபதி விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்..??

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தளபதி 65 படத்தில் தற்போது நடிகர் விஜய் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தனர்.

அத்தனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்காக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கி செட் அமைத்து வந்த நிலையில், தற்போது கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் படத்திற்கான இரண்டாவது கட்ட படப்பிடிப்பை படக்குழு ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பல பெயர்கள் அடிபட்டு வந்தது, அந்த வகையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் செல்வராகவன் நடிகராக சாணிகாயிதம் படத்தில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.