நீ எந்த ஊரு? என்ன ஜாதி ?சர்சையை ஏற்படுத்திய கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெற்றுள்ளது. ஆனால் இடைத்தேர்தலை பொறுத்தவரை திமுக 13 இடங்களிலும் ,அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சி தான் புதிய தமிழகம் கட்சி.இந்த கட்சிக்கு அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது.இதில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.ஆனால் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் ஒரு செய்தியாளர் ,தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் ,நீட் உள்ளிட்ட கேள்விகளை கிருஷ்ணசாமியிடம் கேட்டார்.அதற்கு அவர் பதில் அளித்தார்.பின்னர் கிருஷ்ணசாமி தோல்வி குறித்து  மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணசாமி அந்த செய்தியாளரை பார்த்து நீ எந்த ஊரு.?என்ன ஜாதின்னு சொல்லு என்று கேள்வி கேட்க அந்த அரங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது.செய்தியாளர்கள் புதிய தமிழகம் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.கிருஷ்ணசாமியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment