500 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை சம்மன்!

மாணவர்க்ளின் தேர்வு வினாத்தாள்களை சரியாக திருத்தாதது ஏன் என்று 500 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த மார்ச் மதம் நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19 அன்று வெளியாகின.இதில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்தனர்.இந்நிலையில்,மறுகூட்டலுக்குக்கான முடிவுகள் நேற்று வெளியானது.இதில் தேர்ச்சி பெறாமல் இருந்த சுமார் 1500 மாணவர்கள் வரை அதிக மதிப்பெண் பெற்று இருந்துள்ளனர்.

மேலும் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆசிரியர்கள் தேர்வு மதிப்பீடு செய்யும் போது  தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டது.72 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு கவனக்குறைவால் 27 மதிப்பெண் மட்டுமே வழங்கியுள்ளனர்.இதனையடுத்து தேர்வு மதிப்பீடு பணியில் ஈடுபட்ட 500 ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் செய்த தவறுக்கான விளக்கம் கேட்டுள்ளனர்.

Leave a Comment