தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு எப்போது ?- அமைச்சர் பதில்!

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு பின் முடிவு  எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பது குறித்து 8-ஆம் தேதிக்கு பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.

மேலும், உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை 15ஆம் தேதிக்கு பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று ஊரடங்கு அறிவிப்பின் போது தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்