பாஜக தேர்தல் அறிக்கை எப்போது வெளியீடு…? – எல்.முருகன்

மார்ச் 21-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும், மக்களின் கருத்துக்களை  கேட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில், தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள், செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மார்ச் 21-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும், மக்களின் கருத்துக்களை  கேட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.