பன்னீர்செல்வம் எப்போது மாடு பிடித்தார் ? துரைமுருகன் கேள்வி

பன்னீர்செல்வம் எப்போது மாடு பிடித்தார் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்.

இன்று தமிழக சட்டப்பேரவை 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடையே நடைபெற்ற விவாதம் அவையில்  சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.அதாவது , எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசுகையில்,பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அழைக்கிறார்கள்.பன்னீர்செல்வம் எப்போது மாடு பிடித்தார் ? என்று கேள்வி எழுப்பினார்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவர் மாடு பிடிப்பதை பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,ஜல்லிக்கட்டு அனுமதி பெற்று தந்ததால் பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறார்கள்.துரைமுருகன் விரும்பினால் விராலிமலை ஜல்லிக்கட்டு அழைத்து செல்கிறோம்.பார்வையாளராக வந்தாலும் சரி,மாடு பிடி வீரராக வந்தாலும் சரி,மகிழ்ச்சி என்று  பதில் அளித்து பேசினார்.