இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 284 ரன்களை  நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்…!பூம்ரா அபாரம் …!

இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 284 ரன்களை  நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. அதேபோல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றியும்,இரண்டாவது ஒருநாள் போட்டி சமனிலும் முடிந்தது.பின்னர் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் பங்கேற்கிறது.
இந்நிலையில் 3 வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50  ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 283 ரன்கள் அடித்தது.வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஹோப் 95 ரன்கள் அடித்தார்.மற்ற வீரர்கள் சரியாக அடிக்கவில்லை.
இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா 4,குல்தீப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.இதனால் இந்திய அணிக்கு 284  ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இதன் பின்னர் 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Leave a Comment