மேற்கு வங்க சட்ட பேரவை கூட்டம் ஆளுநர் உரை இல்லாமல் தொடக்கம்…!

மேற்கு வங்கத்தில், மத்திய அரசு மற்றும் ஆளுனருடன், மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ஆளுநரை உரையாற்ற மேற்கு வங்க அரசு அழைப்பு விடுக்கவில்லை. 

மேற்கு வங்கத்தின் ஆண்டின் முதலாவது சட்ட பேரவை கூட்ட தொடர் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. பொதுவாக அனைத்து மாநில அரசும் அஆளுனர் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆனால், மேற்கு வங்கத்தில், மத்திய அரசு மற்றும் ஆளுனருடன், மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ஆளுநரை உரையாற்ற மேற்கு வங்க அரசு அழைப்பு விடுக்கவில்லை.

ஆளுநரின் உரை இல்லாமல் சட்டப்பேரவை கூட்ட தொடர் தொடங்கிய நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக எம்.எல்.ஏ-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், மாநில அரசின் செயல்பாடுகளை கண்டித்து, எதிர்கட்சிகளான இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இந்த கூட்டத்தொடரையே புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.