” எங்களுக்கு மோதிரம் வேண்டும் ” தேர்தல் ஆணையத்திடம் வி.சி.க கோரிக்கை…

  • பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணியில் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி இடப்பெற்றுள்ளது.
  • விடுதலை சிறுத்தைகட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதி மற்றும் புதுச்சேரியில் N.R காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.அதே போல திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் திமுகவின் தோழமை கட்சிகளான சி.பி.ஐ , சி.பி.எம் , வி.சி.க , ம.தி.மு.க ஆகிய கட்சிகள் பேச்சுவாரத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் தங்களுக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளது.ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் மோதிரம் சின்னத்தில் விடுதலைசிறுத்தை கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment