பேரறிவாளன் மனு: ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது : உச்சநீதிமன்றம்

பேரறிவாளன் கருணை மனு மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.தற்போது  7 பேரும் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இதற்கு இடையில் உச்சநீதிமன்றத்தில்  ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது, பேரறிவாளன் கருணை மனு மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஆளுநர் சட்டப்படியான முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கு விசாரணையை  நவம்பர் 23-ஆம் தேதி ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.