பொறியியல் படிப்பில் சேர துணை கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம் – கல்வி இயக்குநரகம்

பி.இ பி.டெக் படிப்பில் சேர துணை கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

அதன்படி, https://www.tneaonline.org/ என்ற இணையத்தளத்தில் வரும் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் 90,000-க்கும் மேற்பட்ட இடங்கள் இந்த கல்வியாண்டில் காலியாகும் சூழல் உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்தது.

இந்நிலையில், அந்த இடங்களை நிரப்புவதற்கு வருகின்ற 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இதனால், 90,000 இடங்களை நிரப்பபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.