கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வாட்சப் குரூப்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வாட்சப் குரூப்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்த கொரோனா வைரசால், தமிழகத்தில் 38,716 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 349 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. 

அதிலும் சென்னையில் ராயப்பேட்டையில், அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பாதிப்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை உதவி கமிஷனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்காக வாட்ஸ் அப் குரூப் ஒன்றினை உருவாக்கியுள்ளார். 

தனிப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் யாரும் மன ரீதியாக பாதிக்க கூடாது என்ற நோக்கத்தில், இந்த வாட்ஸ் அப் குரூப் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.