திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை சந்தித்த மாவட்ட கலெக்டர் ஷ்ரேயா சிங்!

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளை  கவச உடை அணிந்து கலெக்டர் ஷ்ரேயா சிங் பார்வையிட்டுள்ளார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் பொழுது திருச்செங்கோடு வருவாய் உதவி கலெக்டர் இளவரசி, மருத்துவ அலுவலர் தேன்மொழி, கொரோனா சிகிச்சைப் பிரிவு மருத்துவர் சத்தியபாமா, தடுப்பூசி பிரிவு மருத்துவர் மோகனா  ஆகியோரும் உடனிருந்துள்ளனர். அப்பொழுது பச்சிளம் குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் மற்றும் பொது நோயாளிகள் பிரிவு … Read more

மருத்துவமனையில் தலைசீவி, முகச்சவரம் செய்யும் முன்களப்பணியாளர்கள் – நெகிழ்ச்சி சம்பவம்..!

மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தலைசீவி, முகச்சவரம் செய்து வரும் முன்களப்பணியாளர்களின் சேவை அனைவரது நெஞ்சையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கொரோனா தொற்றால் நாடே பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் என இவர்களின் அயராத சேவை மற்றும் உழைப்பு நாட்டில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ முன்களப்பணியாளர்களின் செயல் அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. கொரோனா நோயாளிகள் மன அளவில் … Read more

கொரோனா நோயாளியின் ஆக்சிஜன் 90க்கு கீழ் இருந்தால் தான் சிகிச்சை..!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு 90 ஐ விட குறைவாக இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணத்தால் தமிழக முதல்வர் ஊரடங்கை அறிவித்திருந்தார். இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவு … Read more

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை ஆற்றில் வீசிய உறவினர்கள்..!

கொரோனாவால் இறந்தவரின் உடலை பாலத்தின் மீது நின்று ஆற்றில் வீசிய உறவினர்கள். உத்திர பிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை கோட்வால் என்ற இடத்தில் ராப்தி ஆற்றின் பாலத்தில் உறவினர்கள் இருவர் நின்றுகொண்டு ஆற்றில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் குறித்து பல்ராம்பூர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி, இறந்தவர் பிரேம்நாத் என்றும் அவர் சோக்ராத்பேட்சித்ரதா என்ற நகரில் வசிப்பவர் என்றும் கண்டுபிடித்துள்ளனர். பிரேம்நாத் … Read more

கொரோனா இல்லாத தாய்க்கு கொரோனா தொற்றோடு பிறந்த குழந்தை..!

தாய்க்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில் அவருக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கடந்த 24 ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் இவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது. அதன்பிறகு, அடுத்தநாளே இவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் யாரும் எதிர்பாரா விதமாக … Read more

அதிர்ச்சி..!மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு;59 வயதான கொரோனா நோயாளி பலி..!

உத்திரப்பிரதேச மாநிலத்தின்,காசியாபாத்தில்,மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் பாதித்த 59 வயதான கொரோனா நோயாளி உயிரிழந்தார். இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்த நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பு பரவத் தொடங்கியது.இதனையடுத்து,கருப்பு பூஞ்சை பாதிப்பால் பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து,வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சையும் பரவத் தொடங்கியது. இந்நிலையில்,உத்திரப்பிரதேசத்தின்,காசியாபாத் … Read more

இறந்த கொரோனா நோயாளிடமிருந்து போனை திருடிய செவிலியர்..!

உத்தரகண்ட்டில் கொரோனா நோயாளியின் தொலைபேசியை  செவிலியர் திருடியதாகக் கூறப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் ருகையா என்ற செவிலியர் ஒருவர் கொரோனா நோயாளியிடம் இருந்தது அவரது தொலைபேசியை அவர் இறந்த பிறகு திருடினார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, இறந்த நபரின் மகனான அமன்தீப் கில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மே 8-ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அவருடைய தொலைபேசி திருடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அமன்தீப் … Read more

சேலத்தில் சகோதரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற இளைஞர் – அதிரவைத்த சம்பவம்..!

சேலத்தில் தனது சகோதரியை காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு காரில் வேகமாக சென்ற இளைஞர் பல சாலை தடுப்புகளை இடித்து தள்ளியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர். இவர் ஒரு கட்டிட தொழிலாளர். இவரின் சகோதரிக்கு கொரோனா பாதிப்பு காரணமாக திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சகோதரியை அழைத்துக்கொண்டு அவரது பலேனோ காரில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டார். அப்போது, சகோதரியை அடிக்கடி கவனித்து … Read more

பெங்களூர்: குணமடைந்த கொரோனா நோயாளி..! மருத்துவருடன் நடனம்.!!

பெங்களூர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவருடன் இணைந்து நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூர் நகரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் அவதியுற்றுள்ளார். பல போராட்டத்திற்கு பிறகு இவருக்கு பெங்களூர் மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைத்துள்ளது. பின்னர் சிகிச்சையை முறையாக எடுத்துக்கொண்டு குணமடைந்துள்ளார். குணமடைந்து வீடு திரும்பும் உற்சாகத்தில் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இவர்கள் … Read more

யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த உடல்கள்…! பீதியில் உறைந்த மக்கள்…!

யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த சடலங்களால் பீதியில் ஆழ்ந்துள்ள, குடியிருப்புவாசிகள். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹமீர்பூரில் உள்ள யமுனை ஆற்றில், இறந்த உடல்கள் பல மிதப்பதால் அப்பகுதியில் வாழும் உள்ளூர்வாசிகள் பீதியடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கூறுகையில், சடலங்கள் கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகளின் உடல்கள் என்றும், இறந்த உடல்களை தகனம் … Read more