இந்தியன்-2வில் நான் நடிக்கிறேனா?! டிவிட்டரில் விளக்கம் அளித்த நடிகர் விவேக்!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் 2.O படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார். இந்த படத்தை லைகா புரடெக்ஷ்ன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விவேக் நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ நான் சாந்தோம் பள்ளியில் படித்து கொண்டிருக்கும்போதே கமல்ஹாசனின் தீவிர ரசிகன். இந்தியன்-2வில் எனது பங்களிப்பு தேவைப்பட்டால், இயக்குனர் ஷங்கர் அழைத்தால் நிச்சயம் நடிப்பேன். அதுவரை வதந்திகளை நிறுத்தி வையுங்கள்’ என கூறியுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment