விராட், டிகே அதிரடியில் சொந்த மண்ணில் பஞ்சாபை வதம் செய்த பெங்களூரு ..!

RCBvsPBKS : ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால், பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவானின் பொறுமையான ஆட்டத்திலும், அதன் பிறகு களமிறங்கிய ஜிதேஷ் சர்மா, சாம் கர்ரான் கூட்டணியாலும் அந்த அணி ஸ்கோரை சற்று உயர்த்தியது.

இதனால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 177 ரன்கள் எடுத்தால் தங்களது முதல் வெற்றியை பெறலாம் என களமிறங்கியது பெங்களூரு அணி. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலியும், டு பிளெசிஸ்ஸியும் அடித்து ஆட முடிவு செய்து விளையாடினார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக டு பிளெசி தொடக்கத்திலேயே 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன் பிறகு விராட் கோலி தனது ஆக்ரோஷமான விளையாட்டை விளையாட தொடங்கினார். பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களை நன்கு பக்கங்களும் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்து அவரது ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார், மேலும், அவரது சிறப்பான ஆட்டத்தால் தனது T20 போட்டிகளில் 100வது அரை சதத்தையும் பூர்த்தி செய்தார்.  அவர் சரியாக 77 ரன்களில் இருந்த போது ஹர்ஷல் படேலின் அபாரமான பந்து வீச்சில் இக்கட்டான கட்டத்தில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து, களத்தில் தினேஷ் கார்த்திக்கும், இம்பாக்ட் வீரராக களமிறங்கிய லோம்ரோரும் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் விளையாடி வந்தனர். இறுதி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் முதல் பந்தை சிக்சருக்கு அடித்து அசத்தினார். அடுத்த பந்தை டிகே பவுண்டரி அடிக்க பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.