கிளென் மேக்ஸ்வெல்லுக்கு தனது ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி..!

2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், கேப்டன் ரோஹித் ஷர்மா 47 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 241 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை அடைய ஆக்ரோஷத்துடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, அதிரடியாக விளையாட்டைத் தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து 137 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மிட்செல், ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்க, மார்னஸ் லாபுசாக்னே அரைசதம் கடந்தார். முடிவில் இந்தியா நிர்ணயித்த 241 ரன்களை ஆஸ்திரேலியா எட்டியது.

கலக்கத்தில் ‘கிங்’ கோலி.! ஆறுதல் கூறி தேற்றிய காதல் மனைவி.!

அதன்படி, ஆஸ்திரேலிய அணி  43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா தட்டி சென்றது. இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மட்டுமன்றி, இந்திய அணி வீரர்களும் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.

நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா, கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். இந்த போட்டிக்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரரும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டருமான க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு, விராட் கோலி வாழ்த்து தெரிவித்த தனது ஜெர்சியை பரிசாக அளித்து, ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து கைகுலுக்கிக்கொண்டனர்.

தற்போது விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு பரிசாக அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.